
திருநெல்வேலி மாவட்டத்தில் நரிக்குறவர் காலனி குழந்தைகளுக்கு கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள குழந்தைகளுக்கான மாலை நேர கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகராட்சி மன்ற உறுப்பினர் திரு சுப்பிரமணியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நரிக்குறவர் காலனி உள்ள 50 குழந்தைகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கி பயிற்சி துவங்கப்பட்டது.
பயிற்சியினை இந்து நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் முனைவர் திரு S. A.சங்கரன், பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் நடத்தினர்.
நரிக்குறவர் காலனி நாட்டாமை விக்ரமன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகநூல் நண்பர்கள் குழுவின் உடைய ஒருங்கிணைப்பாளர் திரு நெல்லை டேவிட் செய்திருந்தார்.