
மனம் மகத்துவம் செய்யும் மந்திராலயம்…
நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்று கலங்காதீர்கள். அந்த தோல்விக்கு பின்னால் இன்னொருவரின் வெற்றி இருக்கிறது என்று மகிழுங்கள்.
அடுத்தவர்கள் மீது புகார் கூறி ஓடி வரும் குழந்தையிடம் நீ முதலில் என்ன செய்தாய் என்று கேட்கும் தாய் இந்த சமூகத்திற்கு நல்ல பிள்ளையே தருவாள்.
எதையும் சாதிக்க விரும்புவர்களுக்கு,நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர, கோபம் இல்லை.
விழிப்பாக இருங்கள். ஆனால் மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன் படுத்திக்கொள்ளத் துவங்கி விடுவார்கள்.
அதன்பிறகு அவர்கள் உங்களைக் கையாளவும், நிர்வகிக்கவும் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான்.
உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்கவேண்டும், என்று எதிர்பார்க்கப் படுவீர்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் வற்புறுத்தலில்தான் முடியும்.
உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால் நீங்கள் அதிக சாமர்த்தியமுடையவராக, மிகுந்த திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால் இந்த சமூகத்தினால், உங்களின் ஆக்கம் வீணாக்கப்பட முடியாது.
நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ள ஒருவராக இருக்க முடிந்தால் பிறகு, நீங்கள் அடுத்தவருக்காகவே வாழவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவீர்கள். ஆனால் பயனற்றவாராக இருந்தால் யாரும் உங்கள் “இருத்தலை” திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். உங்களை கண்டுக்கொள்ளவும் மாட்டார்கள்.
உங்களின் குடும்பத்தினரால்இந்த சமூகத்தால் நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்.
இங்கு “‘பயனற்ற தன்மை” என்பது தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும்” பெற்றுள்ளது.
அதன்பின், நெரிசலான சந்தைப் பகுதியில் கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள், அந்த தனிமையில் உங்களின் தியானத் தன்மை வளரும். உங்கள் முழுச் சக்தியும் உள்நோக்கிச் செல்லும். நீங்கள் மேலும் உங்களின் அசல் “இருப்பை” நோக்கிச் செல்வீர்கள்.
சக்கரம் ஒரு சில முறை சுற்றியதற்கே களிமண் பானையாகிறதே.இந்த பூமி எத்தனை கோடி முறை சுற்றியும், மனிதர் சிலர் இன்னும் களிமண்ணாக இருக்கிறார்கள்.
உங்களை தவறாகப் புரிந்து கொண்டவரைப் பற்றி தவறாக எண்ணாதீர்கள்.
மனிதருக்குள் மனோபாவம் வேறு வேறானது என்பதை அறிந்து அமைதியாக இருங்கள்.
மனம் மகத்துவம் செய்யும் மந்திராலயம்.
தினம் அதனை நேசம் கொண்டு பூஜை கொள்ளுங்கள். நீங்கள் நினைப்பதே நடக்கும்.
பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!
தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை.