
பெண்களுக்கான மாநில அளவிலான வூசு போட்டி நடைபெற்றது
கோயமுத்தூரில் நடைபெற்ற கேலா இந்தியா பெண்களுக்கான மாநில அளவிலான வூசு போட்டி நடைபெற்றது.
இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எம் .எஸ்.மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சேர்ந்த எட்டு மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், சீனியர் பிரிவு 65 கிலோ எடை பிரிவில் எஸ் .எல். சி. எஸ்(SLCS) .கல்லூரி மாணவி பி. சோபிகாதேவி வெண்கல பதக்கமும், சப் ஜூனியர் 14 வயது 42 கிலோ எடை பிரிவில் பஸ்கோஸ் (FUSCOS)பள்ளி மாணவி ஓவியா ஸ்ரீ தங்கப்பதக்கம் 39 கிலோ எடை பிரிவில் காவியா ஸ்ரீ வெண்கல பதக்கமும் மகாத்மா(MAHATMA )பள்ளி மாணவி மிதுல மாயா வெண்கல பதக்கமும் 12 வயது 27 கிலோ இடை பிரிவில் ஃபிஷ் (FES) ஸ்கூல் பள்ளி மாணவி ஷிவானி வெள்ளி பதக்கமும் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்களை, பயிற்சியாளர் முத்துக்குமார் பாலசுப்ரமணி பழனி குமார் ரஞ்சித் ஆகியோர் பாராட்டினார்கள்.