April 19, 2025
சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர் பிடிபட்டார்.

சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர் பிடிபட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை அடிவாரத்தில் தனியார் மண்டபத்தில் காந்தி என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர் பிடிபட்டார்.
சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய நபர் பிடிபட்டார்.

கடந்த 11ஆம் தேதி விடுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காந்தியை பார்க்க வந்த ஆனந்த் என்ற இளைஞர் பேசிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவாக இருந்த கொலையாளியை பிடிப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் பிரதீப் உத்தரவுபடி பழனி நகர துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் தலைமையில் பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில்தப்பி ஓடிய ஆனந்தை போலீசார் பல இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் பால சமுத்திரம் பகுதியில் உள்ள வரட்டாறு என்ற இடத்தில் ஆனந்த் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார் ஆனந்தை பிடிக்க முயன்றனர். போலீசாரிடமிருந்து தப்பிக்க முயன்ற ஆனந்த் அருகில் இருந்த பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் ஆனந்தின் கால் முறிந்து காயம் பட்டது. ஆனந்தை பிடித்து பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் ஆனந்த் மற்றும் காந்தி இருவரும் பழனி இடும்பன் கோயில் அருகே சப்பானி சாமியார் என்ற நபரை பராமரித்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

சாமியாருக்கு பக்தர்கள் தரும் பணத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மோதலில் காந்தி என்ற பெண்ணை குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆனந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாமியாரை வைத்து வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.