March 3, 2026
பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்திய பழனி கோயில் இணை ஆணையர்.!

பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்திய பழனி கோயில் இணை ஆணையர்.!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா பத்து நாட்கள் நடைபெற்று முடிந்தது. நாள்தோறும் தைப்பூசத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் , சுவாமி திருவீதியுலா மற்றும் முத்துக்குமாரசுவாமி தேரோட்டம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கடந்த பத்து நாட்களாக கோயிலில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் ஊடகம்‌ மற்றும் பத்திரிகை வாயிலாக காட்சிப்படுத்திய பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நேற்று பத்திரிகையாளர்களுக்கு பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து செல்வராஜ் பிரசாதம் வழங்கி மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *