
தை பூசத்தை முன்னிட்டு பழனி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.!
பழனியில் நாளை தைபூசத்திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு , பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் பக்தர்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை நடந்தே சென்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை அடுத்து பக்தர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பழனி நகர் நல அலுவலரிடம் கேட்டறிந்தார்.