
கீழக்கரை நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது.
பிப் 10 – கீழக்கரை நகர்மன்ற கூட்டரங்கில் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில்
துணைத் தலைவர் ஹமீது சுல்தான் நகராட்சி ஆணையாளர் ரெங்கநாயகி முன்னிலையில் சாதராண கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி பொறியாளர் அருள் துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா ஆகியோர் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இளநிலை உதவியாளர் தமிழ்ச்செல்வன் தீர்மானங்களை வாசித்தனர் இதில் 8 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றபட்டன.
மேலும் கீழக்கரை நகராட்சிக்கு ஏபிசி கருத்தரிப்பு மையம் கட்டுவதற்கு ரூபாய் 55 லட்சம் சிறப்பு நிதிபெற்ற தந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அவர்களுக்கு நகர்மன்ற சார்பாக தலைவர் துணைத்தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.