
பழனி தை பூசத்தை முன்னிட்டு தமிழக சட்ட ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் ஆசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தை பூசத்திருவிழா நாளை நடைபெறவுள்ளது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் உத்தரவின் பேரில் பழனி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தை பூசத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக சட்ட ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் ஆசிர்வாதம் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பழனி அடிவாரம் காவல்நிலையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையில், பழனி நகர் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார்.

3500 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பதாகவும் ஊர்க்காவல் படை மற்றும் தன்னாலர்கள் என 4000 மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், கூட்டம் சம்பவங்களை தடுக்க சீருடை இல்லாத குழு சார்பாக ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று மக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் , பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப் விவரித்தார். உடன் பழனி துணை காவல் கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன், காவல் ஆய்வாளர் மணிமாறன் , சார்பு ஆய்வாளர் விஜய் ஆகியோர் உடனிருந்தனர்.