
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா தொடக்க விழா.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பழனி நகர் முழுவதும் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் 290 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் புதிய காவல் கட்டுப்பாட்டு அறை நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெக வீரபாண்டியன், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆணையர் மாரிமுத்து செல்வராஜ்.

பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன், பழனி நகர காவல் ஆய்வாளர் மணிமாறன், பழனி நகர காவல் உதவி ஆய்வாளர் விஜய், பழனி நகர மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறை காவலர்கள் உடன் இருந்தனர்.

பழனி செய்தியாளர் நா.ராஜாமணி.