
தாராபுரம் அடுத்துள்ள கணபதிநகர் வழியாக கொங்கூர் வரை பேருந்து இயக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை.!
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் கிளை மேலாளரிடம் மனு
தாராபுரம் அடுத்துள்ள கொங்கூர் பகுதிக்கு கடந்த கொரோனா காலகட்டத்தில் காலை , மாலை ஆகிய இரண்டு வேலையும் பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு தற்போது வரை தாராபுரத்தில் இருந்து தொப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ள கணபதிபாளையம் வழியாக கொங்கூர் வரை பேருந்து இயக்காமல் இருந்து வந்தது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி , கல்லூரி செல்லும் மாணவர்கள் , வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மூன்று மைல் தூரம் நடந்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் மீண்டும் அந்த வழியாக பேருந்து இயக்கிட அப்பகுதி மக்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் நேற்று தாராபுரம் அரசு பேருந்து கிளை மேலாளரிடம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கா.சாதிக்பாட்ஷா , தாராபுரம் நகர பொறுப்பாளர் பாலு , தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கோபி மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கணபதிபாளையம் வழியாக கொங்கூர் வரை விரைவாக பேருந்து சேவை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை மனு வழங்கினர்.