May 6, 2025
திருப்பரங்குன்றம் விவகாரம் இந்துக்கள் மீது தி.மு.க. வெறுப்புக் காட்டுவது ஏன்!

திருப்பரங்குன்றம் விவகாரம் இந்துக்கள் மீது தி.மு.க. வெறுப்புக் காட்டுவது ஏன்!

தமிழக இந்துக்களை தமிழக அரசு ஒடுக்க நினைத்தது சரியா.?
மக்கள் ஆட்சியா!?
இந்துக்கள் ஒதுக்கப்பட்டவர்களா!
சரமாரியாக குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் தமிழக மக்கள்.!
திணறும் தமிழக அரசு!
அமைதி பூங்காவான தமிழகத்தை காக்க திமுக அரசு தவறிவிட்டதாக பொதுமக்கள் வேதனை.!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தி தோற்றுப்போன தமிழக காவல்துறை.!?

தமிழகம் ஆன்மீகம் என்ற இடத்தை மையமாக உள்ள மாநிலமாகும். அதிலும் மதுரை மாநகரம் பூங்கா நகரமாகவும் , வரலாற்று பூமியாகவும் விளங்கக்கூடியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மதுரையை உலகளவில் கோவில் நகரம் என்றும் அழைக்கப்பட்டு வருவது, உலகம் அறிந்த வரலாறு ஆகும். இப்படி கோவில் நகரமாக இருக்கும் மதுரைக்கு இதுவரை உறவுகளோடு இனிவரும் காலங்களிலும் எந்த காலகட்டத்திலும் யாருடனும் பந்த பாசங்களோடு ஒரு நிலைப்பாட்டை உருவாக்கக்கூடிய இன்றல்ல, நேற்றல்ல, நாளை வரலாறும் அதுவே நிலை நிறுத்தும் என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

அப்படிப்பட்ட ஒரு ஆன்மீக பூமிக்கு யாரோ? எங்கேயோ? ஏதோ ஒரு விஷயத்தை ஏற்படுத்தி ஒரு பூகம்பத்தை கொண்டு வர நினைத்து, ஒரு அரசியல் சூழ்நிலை அந்தச் சூழ்நிலையை மாற்றி அமைத்தது முருகனின் திருவிளையாடல். அது பற்றிய ஒரு விரிவான கட்டுரையை முழுமையாக ஓரிரு நாளில் எழுதிவிட முடியாது.

சாலச்சிறந்த மிகப்பெரிய பிரபஞ்சம் மதுரை மாநகர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மதுரையின் முக்கியமான திருத்தலம் முருகனின் முதல் வீடாக திகழும் திருப்பரங்குன்ற மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்காக ஒரு அமைப்பு முயற்சி செய்ததை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதற்கு பல அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்ததை தொடர்ந்து, இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழிகளை பலியிடுவதை தடை செய்து மழையின் புனிதம் பாதுகாக்கப்பட வேண்டும்.

என 1931ல் லண்டன் கவுன்சில் கூறிய தீர்ப்புரையின் படி குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்பதை உறுதிப்படுத்த கோரி 04.02.2025 ஆம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு குழு இந்து முன்னணி , இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமான் சேனா, உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர்கள் கலந்து கொள்வதற்காகவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் உள்ள இந்து மக்களிடம் ஆதரவு கோரியது.

இது மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஏராளமான இந்துக்கள் திருப்பரங்குன்றம் மலையை காக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக முடிவு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் இருந்து திரளான மக்கள் ஒன்று திரள் ஆரம்பித்தனர்.

இதை உளவுத்துறை மூலமாக அறிந்து கொண்ட திமுக அரசு, தமிழகத்தில் உள்ள இந்து முன்னணி மற்றும் இந்துக்கள் அமைப்பின் மீதும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்பட ஏராளமானோர் மாநில முழுவதும் கைது செய்யப்பட்டனர்.

இதற்கான காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்லி, கைது நடவடிக்கையும் போலீசாரின் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டது. இதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை. இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்குமாறு நீதிமன்ற உதவியை இந்து அமைப்பினர் நாடினர்.

நீதிமன்றம் இதனை விசாரித்து உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டது. உத்தரவு கிடைத்த சில நிமிடங்களில் மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பெரியரத வீதி, மேலமாசி வீதி போன்ற பல்வேறு இடங்களில் வெற்றி வேல் வீரவேல் என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் திரண்டனர். இதைப்பார்த்த போலீசார் மிரண்டு போனார்கள்.

ஏற்கனவே ஏராளமான இந்து அமைப்பினரை கைது செய்திருந்தனர். இவ்வளவு கூட்டங்கள் எங்கிருந்து எப்படி இப்படி ஒட்டு மொத்தமாக திரண்டு வந்தார்கள் என பயந்து போனது தமிழக அரசு. இது ஒருபுறம் இருக்க, அந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிமுக, திமுக எம்.எல்.ஏ எம்.பிகள் ஒருவர் கூட கலந்து கொள்ளாதது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரையை வாழ்விடமாக கொண்டு, மதுரை மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ , எம்.பி , அமைச்சர் என யாரும் ஒரு அறிக்கை கூட வெளியிடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக , அதிமுக கட்சிகள் மீது தென் மாவட்ட மக்கள் ஏற்கனவே கொந்தளிப்பில் இருக்கின்றனர்.

இந்த சமயத்தில் மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், விஷயம் மிகப் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருகிற காலங்களில் திமுக கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ,எம்.பி பதவி வகிக்கும் நவாப்கனி, காதர் பாட்சா முத்துராமலிங்கம் போன்றவர்கள், அரசியல் சூழ்ச்சி செய்து மக்களை பிளவுபடுத்தும் நிலையை மதுரை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை.

மக்கள் விரைவில் உரிய பாடத்தை புகட்டுவார்கள். நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஏற்கனவே தென் மாவட்டங்களில் திமுக படுதோல்வி அடைந்திருக்கிறது. என்பதை மறந்து விட்டு இது போன்ற பிரச்சனைகளை கட்டவிழ்த்து விட்டு மாற்று மதத்திற்கு துணை போகும் நிலையை திமுக வேண்டுமென்றே செய்து வருகிறது.

அதற்கு மௌனம் சாதிக்கும் அதிமுக நிலைப்பாடும் கண்டிக்க கூடியது. நடைபெற இருக்கிற தேர்தலில் மக்கள் திமுகவுக்கும், அதிமுகவும் தகுந்த பாடங்களை புகட்டுவார்கள் என மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. இந்து மக்கள் தமிழகத்தில் வாழ்கிறோமா அல்லது அண்டை மாநிலங்களில் வாழ்கிறோமா என்ற நிலைப்பாட்டிற்கு அரசும் , அரசு அதிகாரிகளும் , போலீசாரும் செயல்படுவது சரியல்ல, இதனால் இந்து மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்பு அனுமதி அரசிடம் கேட்கிறது. அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. அதற்காக அவர்கள் நீதிமன்றத்தை நாடி செல்லும் நிலையில், மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? 144 தடை உத்தரவு பிறப்பித்தவுடன், இந்து அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்து மக்கள் தங்களின் குலதெய்வங்களாக வணங்கும் முருகனுக்கு திருப்பரங்குன்றம் மலை சொந்தமானது என்பதை உணர்த்துவதற்காக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தமிழகம் முழுவதும் குற்றச்சம்பவம் நடக்கப்போவதை போன்று திமுக அரசு பதற்றமான சூழலை ஏற்படுத்தியது. எதற்காக இந்த நாடகம்.? இந்த கபட நாடகத்தை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏமாற்றத்தில் உள்ள மக்கள் மத்தியில் தன்னெழுச்சியாக பல்வேறு போராட்டங்களை மக்களே முன் நின்று நடத்துகின்ற சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற கபட நாடகத்தை நடத்தி மக்களை திசை திருப்பி வாக்குக்கான நிலையை திமுகவும், அதிமுகவும் ஏற்படுத்த நினைக்கிறது. அதுபோன்ற செயலை மறந்து விட வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே வட மாநிலத்தவர்கள் சிலரால் சட்ட ஒழுங்கு, திருட்டு , கற்பழிப்பு போன்ற சம்பவங்களும் , பல்வேறு சட்ட விரோத செயல்களும் நடந்து வருகிறது.

அதுபோன்ற சம்பவம் தொடர்பாக தமிழக அரசு போராட்டம் நடத்துகின்ற அமைப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தாமல் அராஜகத்தை தூண்டி விடுவது நியாயம் அல்ல., மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் , போராட்டம் நடத்துபவர்களை அமைதிப்படுத்துவதை விட்டுவிட்டு தூண்டி விட்டது எந்த விதத்தில் நியாயம்? என்பதை பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மதுரையில் முழுவதும் வெற்றிவேல் , வீரவேல் என்ற கோஷம் நேற்று ஒலித்தது.

அரசு மட்டுமல்ல போலீசும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள சில திட்டங்களை வைத்திருந்தனர். முருகன் மலை, முருகனுக்கு மட்டுமே சொந்தம் திருப்பரங்குன்றம் மதுரை மக்களுக்கே சொந்தம் இங்கு மதம் ஒரு பொருட்டல்ல, இங்கு வாழுகின்ற மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இங்கு நடைமுறையில் இருப்பதை மாற்றி தேவையற்ற, சிந்தனையை மாற்று சமுதாயத்தின் மீது திணித்து போராட எண்ணுவது திமுக அரசுக்கு அழகல்ல.

அதுக்கு மௌனம் சாதித்து, தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தோடு கூட்டணி வைத்துக்கொண்டு கூட்டணி தர்மம் என்று சொல்லி அதிமுக பேசாமல் மௌனம் சாதிப்பதும், தமிழக மக்கள் மத்தியில் அதிமுக மீதும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. முருகன் சூரசம்ஹாரம், முருக பக்தர்களின் முருகனின் அருள் பெற்றவர்கள் வேல் உண்டு வினை இல்லை என்று அந்த மந்திர சொல்லே போதுமானது.

மதுரையினுடைய வரலாற்றை மாற்றி எழுத எந்த சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலாது என்பதை இந்த நேரத்தில் பக்தர்கள் அனைவரும் சாரசாரமாக வெற்றிவேல் வீரவேல் என்று கோஷங்களை மதுரை முழுவதும் எழுப்பினர்.

இந்த கோஷம் மத்திய அரசுக்கே கேட்டிருக்கும். ஆனால் மாநில அரசுக்கு கேட்கவில்லை. நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் கேட்க வைப்போம் என தென் மாவட்ட மக்களுடைய குரலாக உள்ளது. மதுரையில் ஏற்கனவே டங்ஸ்டன் போராட்டத்தின் நிலைமை மத்திய அரசு பின்வாங்கியது என்பது ஒரு உதாரணமாக சொல்கிறோம். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கடந்த காலங்களில் எப்படி இருந்ததோ அதே நடைமுறை பின்பற்ற மதுரை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறையும் , அரசுக்கு நல்ல விஷயங்களை கொண்டு சென்று மதுரை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்ற வழிவகை செய்ய வேண்டுமென அனைத்து பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்கு நேற்று நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்ட பக்தர்களின் கூட்டத்தை பார்த்திருப்பீர்கள் பார்த்தும் புரியவில்லை என்றால் முருகன் தான் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.