
திருப்பத்தூரில் வாக்குச்சாவடி கிளைக்கழகம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வாக்குச்சாவடி கிளைக்கழகம் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் ஏவி.நாகராஜன் தலைமையில் திருப்பத்தூர் பேரூராட்சிக்கும், தெற்கு ஒன்றியத்திற்கு தனித்தனியாக நடைபெற்றது.
நகரச் செயலாளர் இப்ராம்சா முன்னிலையில் பேரூராட்சிக்கும், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் முருகேசன் முன்னிலையில் தெற்கு ஒன்றியத்திற்கு நடைபெற்ற இந்த வாக்குச்சாவடி கிளைக் கழகம் அமைத்தல் கூட்டத்திற்கு அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஒரு வாக்குச்சாவடி கிளைக் கழகத்திற்கு 9 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அதில் மூன்று நபர்கள் பெண்களாக இருக்க வேண்டும் எனவும் அனைவரும் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
எனவும் மாவட்ட செயலாளர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், முன்னாள் மாவட்ட சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட விவசாய அணி போஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், செல்லப்பாண்டி, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ராஜா முகமது, நவநீதபாலன், ராபின், ஒன்றிய துணைச் செயலாளர் சின்னையா, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் பழனிக்குமார், மாவட்ட பிரதிநிதி ஞானசேகர், காட்டாம்பூர் ரமேஷ் உட்பட நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






