
பழனி அடுத்துள்ள வயலூரில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் பேரவை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம் , தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலூர் பகுதியில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட உடல் உழைப்பு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு மீனாட்சி சுந்தரம் மற்றும் ரெட் சிவகுமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனிலிஸ்ட் அமைப்பில் சிபிஐ எம் எல் தமிழ் மாநிலச் செயலாளர், தோழர் பழ.ஆசைத்தம்பி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
சுமார் இரண்டு மணிநேரம் கூட்டம் நடைபெற்றது. மதவாத சக்திகளுக்கு எதிராகவும் அடிப்படை பிரச்சனைகள், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு சட்டப்பூர்வமாக தீர்வு காண இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனிலிஸ்ட் அமைப்பு எப்போதும் பாடுபடும் என்பதாக உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.






