
ஆசாரிபள்ளம் கூட்டுறவு நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர் கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாரிபள்ளம் கூட்டுறவு நியாய விலை கடை ஆசாரிப் பள்ளம் II நியாயவிலை கடை (கடை எண்.28 AB013 PY) மாவட்டத்தில் முதன்முதலாக 2025 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் பெரும் மதிப்பிற்குரிய அழகுமீனா பொதுமக்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பினை வழங்கி கெளரவித்தார். இந்த விழாவிற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். மேலும் விழாவில் அகஸ்தீஸ்வரம் TSO சுப்புலெட்சுமி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிக பிரமாண்டமான முறையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட் செய்திருந்தார்கள்.