July 25, 2025
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பகுதி இல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அலங்கியத்தைச் சேர்ந்த மூன்று பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அமைச்சர் கயல்விழி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் பகுதி இல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அலங்கியத்தைச் சேர்ந்த மூன்று பேர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அமைச்சர் கயல்விழி வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்தவருக்கு ரூ.50,000/- க்கான காசோலையினையும் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமம், பொன்வேல் பெட்ரோல் பங்க் எதிரில் கடந்த 25.12.2024 அன்று அதிகாலை திருப்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு கார் ஒன்றின் சென்றனர் ஓட்டுநர் காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்புறத்திலிருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 நபர்களில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம். அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் விஜயகுமார், வயது 38, ஆறுமுகம் மகன் செல்வராஜ் 38 மற்றும் காளிமுத்து மகன் விக்னேஷ் 31 ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி, மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி சனிக்கிழமை இன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள அலங்கியத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2.00 இலட்சத்திற்கான காசோலையினையும், காயமடைந்த மகேஷ்குமார் (வயது 33) ரூ.50,000/-க்கான காசோலையினையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் .ஃபெலிக்ஸ்ராஜா, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவர் .இல.பத்மநாபன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்.எஸ்.வி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்து மரணமடைந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.