June 8, 2025
அறிவியல் ஆயிரம் : பெரிய தங்க சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : பெரிய தங்க சுரங்கம்

உலகின் பெரிய தங்க இருப்பு சீனாவில் ஹூனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்த எடை 10 லட்சம் கிலோ, இதன் மதிப்பு 6.76 லட்சம் கோடியாக இருக்கலாம் என ஆய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். 6500 அடி ஆழம் தோண்டி சோதனை நடத்தியதில் 3 லட்சம் கிலோ தங்கம் இருப்பதும், முப்பரிமாண மாடலிங் மூலம் சோதனை நடத்தியதில் 9800 அடி ஆழத்தில் மேலும் 7 லட்சம் கிலோ தங்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் தென் ஆப்ரிக்காவில் 6500 அடி ஆழத்தில் 9 லட்சம் கிலோ தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

தகவல் சுரங்கம் : தேசிய மாசு கட்டுப்பாட்டு தினம், உலக அடிமை தன ஒழிப்பு தினம்

ம.பி.,யின் போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் 1984 டிச.,2–3ல் ‘மெத்தில் ஐசோசைனட்’ விஷவாயு கசிந்து தாக்கியதில், 3787 பேர் பலியாகினர். 5 லட்சம் பேர் பலவித பாதிப்புக்கு உள்ளாகினர். இதுபோல கொடிய நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில் டிச. 2ல் தேசிய மாசு கட்டுபாட்டு தினம் கடைபிடிக்கப் படுகிறது.

உலகில் கட்டாய வேலை, கடன் கொத்தடிமை, குழந்தை திருமணம் போன்ற நவீன அடிமைத்தனம் தொடர்கிறது. இதை ஒழிக்க ஐ.நா., சார்பில் டிச. 2ல் உலக அடிமைத்தன ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.