June 1, 2026
பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஆபத்தான பள்ளம் - விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஆபத்தான பள்ளம் - விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

​பழனி – மே : 05,
​பழனி, கவுண்டர் இட்டேரி ரோடு, வேல் மருத்துவமனை அருகிலுள்ள புதிய தார் சாலையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளால் பொதுமக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.


அப்​பகுதியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை, சமீபத்தில் தார் சாலையாக மாற்றப்பட்டது. சாலை அமைக்கப்பட்ட போதிலும், போர்க்கால அடிப்படையில் சரி செய்யப்பட வேண்டிய சில அடிப்படை பாதுகாப்பு வசதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​முக்கியப் புகார்கள்:

​ஆபத்தான பள்ளம்: குடிநீர் கட்டுப்பாட்டு குழாயின் மேல் இருந்த கான்கிரீட் ஸ்லாப் (Concrete Slab) முற்றிலும் சேதமடைந்து, தற்போது பெரிய பள்ளமாக காட்சியளிக்கிறது. இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்தப் பள்ளம் தெரிவதில்லை, இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

​சாலை குறியீடுகள் இன்மை: புதிய தார் சாலை அமைக்கப்பட்ட பிறகும், சாலையின் ஓரங்களைக் குறிக்கும் வெள்ளை நிற எச்சரிக்கைக் கோடுகள் (White Road Markings) இன்னும் வரையப்படவில்லை. இது வாகன ஓட்டிகளுக்கு, குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.


​பொதுமக்களின் கோரிக்கை:
“புதிதாக தார் சாலை அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் இந்தப் பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். மேலும், சாலை ஓரங்களில் வெள்ளை கோடுகள் வரைந்து முறையான போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விபத்து நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, முன்கூட்டியே இதனைச் சரிசெய்ய பழனி நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்” என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#பழனி #திண்டுக்கல் #சாலைபாதுகாப்பு #பழனிநகராட்சி #மக்கள்சேவை #சமூகநீதி #சாலைவசதி #பொதுமக்கள்முக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *