
படப்பையில்-ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1,35.96,000 மதிப்பீட்டில் அரசு கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாய்ராம் கல்வி குழுமத்தால் கட்டிதரப்பட்ட 60,00000 மதிப்பீட்டில் புதிய வட்டார கல்வி அலுவலக பயன்பாட்டு துவக்க விழா அன்பரசன் திறந்து வைத்தார்..
குன்றத்தூர் டிசம்பர் 8
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அரசு துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் நிதி, ஒன்றிய பொது நிதி, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என Rs:1,35,96,000 மதிப்பீட்டில் கரசங்கால், நாட்டரசன் பட்டு,மணிமங்கலம், சென்ன குப்பம்,ஆதனூர், திருமுடிவாக்கம்,நடுவிரப்பட்டு, உள்ளிட்ட ஊராட்சிகளில் அரசு கட்டிடங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சாய்ராம் பள்ளி குடும்பத்தால் 60-லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வட்டார கல்வி அலுவலகத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அமைச்சருடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாவட்ட திட்ட இயக்குனர் ஆர்த்தி, குன்றத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சரஸ்வதி மனோகரன்,சாய் குழுமம் சாய் பிரகாஷ், லியோ முத்து, ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் மாற்றுத்திறனாளிக்கு நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சக்கர மிதிவண்டி வழங்கப்பட்டது.






