
தமிழ்நாடு முத்துமலை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம்..
தமிழ்நாடு முத்துமலை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கட்டுமானத் துறையிலும், அமைப்புசாரா துறையிலும் உழைக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் நலன்களை எளிதில் பெற்றுத்தருவதற்கு சங்கம் தொடர்ந்து முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாடு கட்டுமான உழைப்பாளர்கள் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றில் தொழிலாளர்களை பதிவு செய்து பல்வேறு நலன்களைப் பெறச் செய்வதில் சங்கம் முக்கிய பங்காற்றுகிறது.
54 வகையான கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்யலாம் கட்டுமான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக், வெல்டர், தச்சர், மரம் அறுப்பவர், ஆப்பரேட்டர், பெயிண்டர், பந்தல் அமைப்பாளர் ஓட்டுநர், காவலாளி, சலவை தொழிலாளி ஆகியோர் உட்பட மொத்தம் 54 வகையான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து, மருத்துவ உதவி, கர்ப்ப கால உதவி, கல்வி உதவி, திருமண உதவி, இறுதி சடங்கு உதவி உள்ளிட்ட பல நலன்களைப் பெற முடியும்.
62 வகையான அமைப்புசாராத தொழில்கள் பதிவு செய்யலாம்., அதேபோல், அமைப்புசாரா தொழில்களில் வீடியோ/புகைப்பட ஒளிப்பதிவு, பிளாஸ்டிக் தயாரித்தல், மாவு மில், ஆயில் மில், கயிறு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், சாயப்பட்டறை, பட்டுப்புழு வளர்த்தல், தையல், முடி திருத்தும் நிலையங்கள், அழகு நிலையம், ஆட்டோ ஓட்டுநர், டாக்சி ஓட்டுநர் உள்ளிட்ட 62 தொழில்கள் பதிவு செய்ய தகுதி பெறுகின்றன.
தமிழக அரசு மாணவர்கள், பெண்கள், முதியோர் மற்றும் பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களின் நிதி உதவிகளை வெளியிட்டுள்ளது.
6–12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு உதவித்தொகை ரூ.1000–3000 வரை வழங்கப்படுகிறது.
கல்லூரி, ஐடிஐ, பாலிடெக்னிக், யூ ஜி, பிஜி படிப்புகளுக்கான உதவி ரூ.3000 முதல் ரூ.8000 வரை வழங்கப்படுகிறது.
IIT, IIM, MBBS போன்ற உயர் படிப்புகளுக்கான உதவி வருடத்திற்கு ரூ. 50000 வரை வழங்கப்படுகிறது.
மூளைச்சாவு தானம் செய்த குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும்.
விபத்தில் மரணம் ஏற்பட்டால் ரூ.2 லட்சம் வரை நிவாரணம் கிடைக்கும். பணியின் போது மரணம் ஏற்பட்டால் 8 லட்சம் வரை நிவாரணம் திருமண நிதி உதவியாக ரூ.25,000–50,000 வழங்கப்படும்.
நோய் சிகிச்சை/அவசர மருத்துவத்திற்கான நிதி ரூ.10,000 வரை வழங்கப்படும்.
மாத்திரை நல திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18,000 வரை உதவி வழங்கப்படுகிறது.
சிறப்பு திறன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில் பயிற்சிகளுக்கான உதவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இத்தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், பதிவு செய்த பின் சுகாதார காப்பீடு, விபத்து நிவாரணம், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மகப்பேறு நல உதவி, முதியோர் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு நலன்களை அரசின் மூலம் பெற முடியும்.
சங்கத்தின் செயல்பாடுகள் சங்கம் சார்பில் கிராமம் முதல் நகரம் வரை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, பதிவு செய்யாத தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை வாரியங்களில் பதிவு செய்து, அரசின் நலன்கள் நேரடியாக கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து வழிகாட்டுதல், ஆவணத் தயாரிப்பு, ஆன்லைன் பதிவு உதவி, நலத்திட்ட கோரிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட சேவைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு உழைப்பாளர்களின் நலன்களை பாதுகாப்பதும் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதும் தான் சங்கத்தின் முதன்மை நோக்கம் எனவும், மேலும் பல துறைகள் தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெற சங்கம் தொடர்ந்து முன்வரும் எனவும் தமிழ்நாடு முத்துமலை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முத்து மலை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் அரசு பதிவு எண்: 536/RMD* ராமநாதபுரம் மாவட்ட தலைவர் வேல்முருகன் Ph:9962094991*9940923571






