
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்..
திருப்பூர் : டிசம்பர், 04
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ,மாநில பிரதிநிதித்துவ பேரவை அறைகூவல் தீர்மானத்தின் அடிப்படையில் திருப்பூர் மாநகரில் மாபெரும் மறியல் போராட்டம் 04.12.2025 அன்று நடைபெற்றது…

மாவட்ட தலைவர் அரசு ஊழியர் சங்கம் பாண்டியம்மாள் தலமையில், தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் பிரேமலதா மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார்…
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் , தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம்மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் , உதவி வேளாண்மை அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் பாலு , தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பொருளாளர் அந்தோணி ஜெயராஜ், ஊரக வளர்ச்சி துறை மாவட்டத் தலைவர் சாந்தி , தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கம் அன்னபூரணி, கல்வித்துறை மாவட்ட பொறுப்பாளர்
செல்வகுமார், சமூக நலத்துறை சங்கம் மாநிலத் துணைத் தலைவர் திவாகரன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் ஆதிலட்சுமி, ஆய்வக நுட்பர் அலுவலர் சங்கம் மாவட்ட பொறுப்பாளர் தங்கபாண்டியன், தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் பசுபதி, அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் மேகலிங்கம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.. போராட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது..

மறியல் போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தனியார் மன்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்..






