
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 10 இளைஞர்கள் கைது. கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் 4 பறிமுதல் செய்து போலீசார் விசாரணை..
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஏ பி ஏ காலேஜ் பாலாஜி மருத்துவமனை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஐஸ்வர்யா மருத்துவமனை ஆகிய பகுதியில் டிஎஸ்பி தனஜெயன் அதிரடி உத்தரவு பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன். சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞர்களை போலீசார் விசாரணை செய்தனர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக போலீசாரிடம் தகவல் தெரிவித்த 10 பேரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் 10 பேரிடம் இருந்தும் 140 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து. அடி வாரம் தில்லையடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த சைத்தான் பாலா என்கிற பால சரவணன். இந்திரா நகரைச் சேர்ந்த கார்த்திக். குரும்பபட்டி அடிவாரப் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன். தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ருத்ரா பூபதி. சாமி தியேட்டர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன். குரும்பபட்டியைச் சேர்ந்த நாகராஜன். பாட்டாளி தெருவை சேர்ந்த சரவணன். தில்லையடி வள்ளியம்மை தெருவை சேர்ந்த பிரதீப். தெற்கு அண்ணா நகரை சேர்ந்த முத்துப்பாண்டி . அடிவாரம் கௌதம் என்கிற லல்லி 10பேரும் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ய காத்திருந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 100கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது பறிமுதல் செய்யப்பட்டது அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்






