March 2, 2026
நாற்று நடும் போராட்டம்:

நாற்று நடும் போராட்டம்:

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே பானாமூப்பன்பட்டி ஊராட்சி ரெட்டியபட்டியில் ,
சாலை வசதி கேட்டு நாற்று நட்டு பெண்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே பானாமூப்பன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டியபட்டி விரிவாக்க பகுதியில் சுமார் 40 வீடுகளில் சேரும் சகதியுமாக உள்ளது.

இந்த வழியாக வருவோர் போவோர் தடுக்கி விழும் சூழ்நிலை உள்ளது. முழங்கால் அளவு சகதியாக இருப்பதால் எந்த ஒரு விஷயத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.

இது குறித்து, பல்வேறு முறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இதனால் பொறுமை இழந்த பெண்கள் உள்பட 40க்கும் மேற்பட்டோர் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, இரண்டு நாட்களாக விடாமல் பெய்து வரும் மழையால் சேரும் சகதியுமாக முழங்கால் அளவு தேங்கியுள்ளது.

இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, அல்லது தார் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

சேரும் சகதியும் சாக்கடை நீரும் இந்தப் பகுதியில் ஒன்றாக கலந்து இருப்பதால் நோய் தொற்று அபாயமும் உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகமும் ஒன்றிய நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.

சாலை அமைக்காவிட்டால், விரைவில் பஸ் மறியல் செய்யப் போவதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *