March 2, 2026
ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர்ரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எதிரே வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அதிருப்தி

ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர்ரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எதிரே வேகத்தடை இல்லாததால் விபத்து ஏற்படும் வாய்ப்பு பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அதிருப்தி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூர் ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும் குன்றத்தூர் வழியாக வடபழனி செல்லும் சாலையை இணைக்கும் யூனியன் சாலை அமைந்துள்ளது இச்சாலை தற்சமயம் சுமார் மூணே கால் கோடி மதிப்பீட்டில் 3.500 கி.மீ (313.41லட்சம்)விரிவாக்க பணி நடைபெற்று முடிந்தது.

மூன்று கிலோ மீட்டர் தூரம் கிராமத்திற்கு உள்ளே செல்லும் இச்சாலையில் 6 குறுகிய வளைவுகள், நடுநிலைப்பள்ளி ,அங்கன்வாடி மையம், விநாயகர் கோயில்,கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை சாலையை ஒட்டி அமைந்துள்ளன மற்றும் இருங்காட்டுக்கோட்டை பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் இருந்து கனரக வாகனங்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றன.

இதில் நான்கு சக்கர வாகனங்களான கார் வேன் இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களும் உள்ளடக்கும் இந்நிலையில் 6 ஆபத்தான வளைவுகள் மற்றும் கோயில் கிறிஸ்தவ தேவாலயம் பள்ளிக்கூடம் அங்கன்வாடி உள்ள அனைத்து இடங்களிலும் வேகத்தடை இதற்கு முன்பு அமைக்கப்பட்டிருந்தது ஆனால் சாலை விரிவாக்க பணி முடிந்த நிலையில் வேகத்தடை அகற்றப்பட்டு விட்டது இதுகுறித்து சாலை பனி ஒப்பந்ததாரரை அலைபேசியில் தொடர்பு கொண்டால் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஒப்பந்த மேற்பார்வையாளர் வட்டார வளர்ச்சி அலுவலக இளநிலை பொறியாளரிடம் கேட்டபோது வேகத்தடை எஸ்டி மேட்டில் கிடையாது என கூறுகின்றனர்

மேலும் வேகத்தடை போட வேண்டும் என்று நாங்களே விரும்பினால் பக்கத்தூரில் ஏதேனும் சாலை போடும் பட்சத்தில் மீதம் உள்ளதை எடுத்து வந்து வேகத்தடை அமைத்து தருகிறோம் என சமூகப் பொறுப்பின்றி பதிலளிக்கிறார்கள்.

எனவே இது சம்பந்தமாக இச்சாலையை ஆய்வு மேற்கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே பெற்றோர்கள் ஊர்
பொதுமக்கள் மற்றும் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது

இதில் கூடுதல் தகவலாக தார் சாலை பக்கவாட்டில் 1 மீட்டர் அளவிற்கு மண் கொட்டி நிரப்பப்பட்டுள்ளது அந்த மண் சாலை ஓரத்தில் அருகில் இருந்தே தோண்டி எடுத்து அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது இதனால் சாலை ஓரத்தில் உள்ள மயான சுற்றுசுழல் மற்றும் மின்சார வாரியத்தின் சுற்றுச்சுவர் இவைகள் இடிந்து விழும் சூழலில் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *