
பழனியில் டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் காவல்துறை நடத்திய தீவிர வேட்டையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு கும்பல் கூண்டோடு கைது.
அதிரடி மாஸ் காட்டும் பழனி காவல்துறையினர்.
பழனி, நவம்பர் : 25
திண்டுக்கல் மாவட்ட பழனியில் தொடர்ந்து ஒரு சில கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக அப்பகுதி பொதுமக்கள் டிஎஸ்பி தனஜெயன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி டிஎஸ்பி உத்தரவின் பெயரில் பழனி நகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் அவர்களின் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையில் காவலர்கள் செல்வ குமரன், மகேஸ்வரன், செந்தில் முருகன், அழகுமணி உள்ளிட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சிவகிரி பட்டி எதிரே உள்ள தண்ணீர் தொட்டிக்கு கீழ் இருசக்ரா வாகனங்களுடன் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் காவல்துறையினர் வருவதை பார்த்து பதற்றம் அடைந்து வெவ்வேறு திசையில் வாகனங்களை முடுக்கிவிட்டு வேகமாக சென்றனர். உடனடியாக சார்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்பு அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து சுமார் 100 கிராம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடையே விசாரித்த பொழுது அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக வந்தோம் என ஒப்புக்கொண்டனர்.
மேலும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் தீவிரமாக சோதனை மேற்கொள்ளதில் பழனி ஆண்டவர் கல்லூரிக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் ஒரு கும்பல் நின்று கொண்டு இருப்பதை சார்பு ஆய்வாளர் அறிந்து பின்பு அவர்கள் தப்பி ஓட முயற்சிப்பார் என்று அவர் உடன் இருக்கும் காவல்துறையினரை குழுவாக பிரித்து அனுப்பி அவர்களிடம் நெருங்கும் வேளையில் அவர்கள் காவல்துறையை கண்டவுடன் தப்பியோட முயற்சித்தபொழுது காவல்துறையினர் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில் அந்த கும்பல் இடமிருந்தும் சுமார் 150 கிராம் மதிப்பிலான கஞ்சா கிடைத்தது.
மேலும் அவர்கள் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு இந்த இரண்டு கும்பலை சேர்ந்த 15 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குழுவினர்களின் விவரம்
பழனி அடிவாரம் பாட்டாளி தெரு குறும்பப்பட்டி பகுதியை சேர்ந்த பிரஜீத்
பழனி தாமரைக் குளம் அருகில் உள்ள ராசாபுரம் பகுதியைச் சேர்ந்த அமுதநிலவன்
பழனி அடிவாரம் பாட்டாளிதெரு பகுதியில் சேர்ந்த ராமச்சந்திரன்
பழனி அடிவாரம், குறும்பபட்டி பகுதி சேர்ந்த அஜித் குமார்
பழனி மதனபுரம் பகுதியைச் சேர்ந்த மணிவேல்
பழனி பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த வடிவேல்
பழனி பெத்தநாயக்கன்பட்டி தெற்குத் தெருவை சேர்ந்த மாரிமுத்து
பழனி பாலசமுத்திரம் அர்ஜுனன் தெருவை சேர்ந்த பெரியசாமி
பழனி தெற்கு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த ராஜா
பழனி காந்திரோடு தம்பிரான் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன்
பழனி பாட்டாளி கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்
பழனி கருப்பண கவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த சரவணன்
பழனி அடிவாரம் கோனார் தெரு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்
பழனி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்
ஆகிய 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் அவர்களிடமிருந்து 100 + 150 மொத்தமாக 250 கிராம் மதிப்பிலான கஞ்சா மற்றும் 5 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காவல்துறையினின் தீவிர வேட்டையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






