
விவசாயிகளுக்கு தேவையான யூரியா சில ஏஜெண்டுகள் மூலம் தனியார் உரக்கடைகளுக்கு செல்கிறது என்று விவசாயிகளின் குற்றச்சாட்டு.
விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரங்களை தனியார் உரக்கடைகளுக்கு 70% கொடுத்துவிட்டு முப்பது சதவீதம் கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கி அதிலும் சில ஏஜெண்டுகள் மூலம் தனியார் உரக்கடைகளுக்கு செல்கிறது என்று விவசாயிகளின் குற்றச்சாட்டு
மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா வாங்க செல்லும்போது விவசாயிகளிடம் வேறு ஒரு உரம் வாங்கினால் தான் யூரியா கொடுப்போம் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது கட்டாயமாக்கப்படுகிறது இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக உள்ளது
மொத்த உரம் இறக்குமதியில் தனியாருக்கு தான் எழுபது சதவீதத்துக்கு மேல் செல்கிறது கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 30 சதவீதம் கூட உரம் வரவில்லை
தனியார் உரக்கடைகளுக்கு அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் இவ்வளவு விஷயம் தெரிந்தும் மௌனமாக இருப்பது ஏன்
தென் மாவட்டங்களில் நிபந்தனைகள் விதிக்கும் தனியார் உரக்கடைகளை சென்னையில் எழிலகத்தில் இப்ப பிரச்சனையை மனுவாக கொடுத்துவிட்டு ஆதாரப்பூர்வமாக தனியார் உரக்கடைகள் நிபந்தனை விதித்தால் அந்தக் கடையின் உரிமத்தை ரத்து செய்யக்கோரி மிகப்பெரிய அளவில் எழிலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது
தமிழ் விவசாயிகள் சங்கம் மாநில குழு






