March 2, 2026
பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..

பல் நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்..

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

சோழவந்தான் தொகுதி வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில், மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பொற்செல்வன், வட்டா மருத்துவர் வளர்மதி. மாவட்ட அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றியச்செயலாளர்கள் தன்ராஜ்பரந்தாமன், முத்தையன், அருண்விஜயன், நகர செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சித்தலைவர் சுமதி பாண்டியராஜன், செயல் அலுவலர் சசிகலா இடையபட்டி நடராசன்.இளைஞர் அணி பிரதாப், அவை தலைவர். தங்கம். பழனி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

இதில், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துபெட்டகம், காசநோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர்கள் சிகிச்சையளித்தனர்.

உயர்ரத்த அழுத்தம்,சர்க்கரை நோய், மகளிர் குழந்தைகளுக்கான நோய் கண்டறிதல், எலும்பு, நரம்பியல், காது, மூக்கு, கண், தொண்டை போன்ற 17 வகை துறைகளை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.

சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *