
அரசு பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து வழங்குதல்...
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் மழைக்காலத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விதைப்பந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை தாங்கினார்.
பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு வீரபாண்டி அவர்கள் மாணவர்களுக்கு விதைப்பந்து வழங்கி அதனுடைய நன்மைகள் அதனை விதைக்கும் முறைகள் குறித்து விளக்கினார்.
விதைப்பந்துகளை பள்ளியின் பொருளாதாரம் மன்றம் சார்பில் மாணவர்கள் மற்றும் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி ஆகியோர் தயார் செய்தனர்.






