
நிலக்கோட்டையில் டி.என்.டி.ஒற்றை சமூக மக்களுக்கு சாதி சான்று வழங்க கோரி உண்ணா விரதம் போராட்டம்
நிலக்கோட்டை, நவ.17 –
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக சீர் மரபினர் மக்களுக்கு டி.என்.டி / டி.என்.சி. என்று இரட்டைச் சான்று வழங்குவதை தவிர்த்து டி.என்.டி என்ற ஒற்றைச் சாதி சான்று வழங்க மத்திய,மாநில அரசுகளையும் வலியுறுத்தியும், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்ட நிலக்கோட்டை பிரமலைக் கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் ஜி கலந்து கொண்டு பேசியதாவது:- சுதந்திரத்திற்காக பாடுபட்டு பல உயிர்களை இழந்த வாரிசுகளுக்கு சாதி சான்று வழங்குவதால் தமிழக அரசுக்கு என்ன இழப்பு ஏற்படும். வருகிற காலங்களில் டிஎன்டி சாதி சான்று வழங்காமல் திராவிட கட்சிகள் ஓட்டு கேட்டு வந்தால் நிச்சயமாக டிஎன்டி மக்கள் வாழும் பகுதிகளில் திராவிட கூட்டங்களை விரட்டி அடிக்கும் நேரம் வெகு தூரம் இல்லை.
உண்ணாவிரதம் இருந்த பழக்கமே இல்லாத என் மக்களிடம் இன்றைக்கு உண்ணா நோன்பு போராட்டம் நடத்துகிறோம் என்றால் வருகிற காலங்களில் தேர்தலில் டி.என்.டி மக்களின் கிராமங்களில் ஓட்டு கேட்டுப் போகும்போது நுழைய விடமாட்டோம். ஒரு சமூகத்திற்கு 2 சாதி சான்று வழங்குவது முறையான சட்டப்படியான தவறாகும்.
எனவே ஒற்றைச் டி.என்.டி சாதி சான்று வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் டி.என்.டி எங்கள் உரிமை, எங்களை தொடர்ந்து புறக்கணித்தால் நடைபெறும் தேர்தலில் வாக்குரிமையை புறக்கணிப்போம், தமிழகத்தில் உள்ள சீர் மரபினர் மக்களுக்கு உடனடியாக டி.என்.டி ஒற்றைச் சாதி சான்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கூட்டத்தில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் டி.என்.டி மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் அன்பழகன், வெள்ளாளர் முன்னேற்ற கழக திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் மாதவன் பிள்ளை, 58 கால்வாய் திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரும்புத் துரை, முன்னாள் கள்ளர் பள்ளி மாணவர் சங்க தலைவர் நேதாஜி, அகில உலக புலம்பெயர்ந்த பிரமலைக் கள்ளர்கள் கூட்டமைப்பின் மத்திய ஒருங்கிணைப்பாளர் புத்தரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட திண்டுக்கல் மாவட்ட தலைவர் தமிழ்செல்வம், வி.கே.சி நடராஜன் நிறுவன மஞ்சு கணேஷ், தமிழக சீர் மரபினர் உரிமை மீட்பு இயக்கம் நாரைகிணறு சீனி பாண்டி, நிலக்கோட்டை பிள்ளைமார் சங்க தலைவர் செல்லையா, அனைத்து உலக செட்டியார் பேரவை தலைவர் சுப்பிரமணி, வீரபாண்டிய கட்டபொம்மன் கழக ஒன்றிய தலைவர் துரைப்பாண்டி, மற்றும் மகளிரணி மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






