March 2, 2026
வாக்காளர் பட்டியல் திருத்தம் : மதுரை மாவட்ட ஆட்சியர்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் : மதுரை மாவட்ட ஆட்சியர்.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம், 2026 பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2752 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கீட்டுப்படிவங்கள் (Enumeration Form) வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்பொழுது, அப்படிவங்களை பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் கணக்கீட்டுப்படி வங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைப்படுத்தும் வகையில் 18.11.2025 முதல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. மேலும், 19.11.2025 (புதன்கிழமை) மற்றும் 20.11.2025 (வியாழக்கிழமை)ஆகிய இரண்டு தினங்களும் சிறப்பு தீவிரத்திருத்தம்(SIR) தொடா்பாக வாக்குச்சாவடி மையங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உதவி மையம் செயல்படவுள்ளது. மேற்படி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கணக்கீட்டுப் படிவங்கள் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஐயப்பாடுகளை களைந்திடவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்காளர்களே https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது பழைய வாக்காளர் அடையாள அட்டை (அல்லது) 2002 அல்லது 2005 ஆம் ஆண்டில் அவர்கள் வாக்களித்த சட்டமன்றம், வாக்குச்சாவடி பெயர் போன்ற விவரங்களை பயன்படுத்தி தங்களுக்குரிய தகவல்களை பெற்று கொள்ளலாம்.

தாங்களே தங்களது குடும்ப உறுப்பினா் விவரங்களை பொருத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது பழைய வாக்காளர் அடையாள அட்டை (அல்லது) 2002 அல்லது 2005 ஆம் ஆண்டில் அவர்கள் வாக்களித்த சட்டமன்றம், வாக்குச்சாவடி பெயர் போன்ற விவரங்களை உதவி மையத்தில் வழங்கும்பட்சத்தில் எளிதாகவும் விரைவாகவும் வாக்காளா்களுக்குரிய தகவல்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

எனவே, மேற்கண்ட (SIR) உதவி மையத்தினை வாக்காளர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவின்குமார், கேட்டுக்
கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *