March 2, 2026
பழனி வட்டாட்சியர் தலைமையில் கண்டியம்மன் கோயில் நிலப் பிரச்சனை சார்பாக அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றன.

பழனி வட்டாட்சியர் தலைமையில் கண்டியம்மன் கோயில் நிலப் பிரச்சனை சார்பாக அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றன.

பழனி : நவம்பர் 18.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூர் பகுதியில் அமைந்துள்ள கண்டியம்மன் கோயில் அருகே காலியிடங்களை நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் கோயில் நிர்வாகம் சுற்றுச்சுவர் எழுப்பி ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.

தொடர்ந்து இச்சுவறினால் அப்பகுதி வழியே விவசாயிகள் வயல்களுக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உடனடியாக கோயில் அருகே பொது பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தினருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இடையே சமரச அமைதிப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் பிரசன்னா தலைமையில் நடைபெற்றன.

தொடர்ந்து இந்நிகழ்வில் காவல்துணை கண்காணிப்பாளர் தனஜெயம் கீரனூர் காவல் ஆய்வாளர் தென்னரசு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணன் திருக்கோயில் கண்காணிப்பாளர் சாமிநாதன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் கணேஷ் குமார் மற்றும் சமூக ஆர்வலர்களான வீரமுத்து
துர்க்கைஈஸ்வரன், காஜாமைதீன்,பிரபு, மாரியப்பன், குமார், சுரேஷ், காமராஜ், துர்க்கையன்ணன், ஆறுமுகம், முருகன், மருதுபாண்டி, சுப்பிரமணி, நடராஜ், பரமசிவம், அம்ஜலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றன.

தொடர்ந்து திருக்கோயிலில் பூசாரியாக வேலை செய்து வந்த சுரேஷ் என்பவரை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் கால் புணர்ச்சி காரணமாக வேலையில் இருந்து விடுவித்துள்ளார்.

மற்றும் கோயில் அருகே உள்ள இஸ்லாமியர்களின் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி உள்ளதாக இஸ்லாமியர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் முறையான நீதிமன்ற ஆவணங்கள் இல்லாமல் கட்டிடம் கட்டியதால் உடனடியாக நீதிமன்ற உத்தரவு வாங்கி வரவேண்டும் இல்லையென்றால் சுற்றுச்சுவர் கட்டிடத்தை அகற்றப்பட வேண்டும் என வட்டாட்சியர் தலைமையில் முடிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து கீரனூர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக சுற்றுசுவறை அகற்ற வேண்டும் இல்லை என்றால் பல்வேறு போராட்டங்கள் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *