
தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க மாநில தலைவர் தேர்வு
திருச்சி:
திருச்சியில் மாநில மத்திய செயற்குழு கூட்டம், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்க மாநில தலைவராக பி. ஜி .ரவிக்குமார்,
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
இக் கூட்டத்திற்கு, தேர்தல் அலுவலராக சூரிய நாராயணன்,ரமேஷ் கண்ணா மற்றும் திருமதி.கவிதா ஆகியோர்கள் தேர்தலினை நடத்தி அறிவிப்பினை வெளியிட்டனர்.
அதனை முன்னிட்டு, மாநில பொறுப்புத் தலைவர் ஆ.செந்தில் வேல், பி.ஜே.ரவிக்குமார் , தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாநில தலைவராக முன்மொழிந்தார். இக்கூட்டத்திற்கு, சிறப்பு அழைப்பாளராக, பங்கேற்று வே. மகேந்திர குமார் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்தின் மாநில தலைவர் , ஒன்றியத்தின் மாநிலப்
பொருளாளர் திலகர்,மேனாள் மாநில தலைவர் என். தண்டபாணி, மேனாள் மாநில தலைவர் தேசிங்குராஜா, மேனாள் மாநிலத் துணைத் தலைவர் சந்திரசேகர், மாநில பொருளாளர் பார்த்தசாரதி, அமைப்புச் செயலாளர் பாலமுருகன்,மேலும் ஒன்றிய மதுரை
மாவட்டத் தலைவர் அ. இளங்கோ, பாலமுருகன், சென்னை ஏ.வி.ஜி. சேகர்,திருவள்ளூர் கமலக்கண்ணன்,திருச்சி சதீஷ் பாபு, ஆரோக்கியராஜ்,ஆனந்த், ஜான் வில்லியம்,கவிதா, லட்சுமி, திண்டுக்கல் சரண்ராஜ் ,சுரேஷ் கோவை வீராசாமி, தஞ்சை நந்தகோபால்’ தேனி ஜான்சிராணி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் .
முடிவில், மாநிலப் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்






