
பத்திரிக்கையாளர் பெயரில் போலி புகார்-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..
மடத்துக்குளம், நவம்பர் : 18
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு பகுதியை சேர்ந்தவர் சாதிக் பாட்சா.. இவர் சமூக ஆர்வலராகவும் முன்னணி பத்திரிக்கையில் நிருபராகவும் பணியாற்றி வருகிறார்.. சமீப காலங்களில் இவரின் பெயரை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மீது தவறான பொய் புகார்கள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு வந்தது..
அதற்கு நேரில் சென்று தான் அதை அனுப்பவில்லை என விளக்கம் கூறியிருந்தார்.. இந்நிலையில் தற்போது உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில மேல்நிலைப்பள்ளிகள் மீது புகார்களும், ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்களும், மற்றும் முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் மீது அவதூறு புகார்களும் குறிப்பிடப்பட்ட புகார் மனு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.. அதில் சாதிக் பாட்சா என்பவரின் பெயருக்கு பதிலாக சாதிக் அலி எனக் குறிப்பிட்டு, சாதிக் பாட்சா அவர்களின் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது..
இதனை அறிந்த பள்ளியின் நிர்வாகத்தினர் சாதிக் பாட்ஷாவை தொடர்பு கொண்ட போது, தனக்கும் அந்த புகாருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என விரிவாக விளக்கம் கூறியுள்ளார்.. மேலும் தொடராக சாதிக்பாட்சா என்பவரின் பெயரை பயன்படுத்தி போலியாக புகார்கள் அனுப்பப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தானும் ஒரு கோரிக்கை மனு அனுப்பப் போவதாகவும் தெரிவித்தார்.. இதுபோன்ற போலி புகார்களை பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்..






