
உடுமலையில் அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
உடுமலை நவம்பர் : 11
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில குழுவின் கோரிக்கைக்கு ஏற்ப, உடுமலைப்பேட்டை , மடத்துக்குளம் வட்டக் கிளைகளின் சார்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் 100 பேர் கலந்துகொண்ட மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
உடுமலை வட்டத் தலைவர் தாசன் தலைமையில், மடத்துக்குள வட்டத் தலைவர் ராமதுரை முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற கல்வித்துறை நல அமைப்பு தோழர் கணபதி, மாவட்ட இணைச்செயலாளர் மின்னல் கொடி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற பள்ளி கல்வித்துறை பொறுப்பாளர் ஆசிரியர் செல்லதுரை, காவல்துறை சார்பில் முன்னாள் உதவி ஆய்வாளர் ரங்கராஜ், வருவாய்த்துறை சார்பில் முன்னாள் வட்டாட்சியர் தயானந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மடத்துக்குள வட்டப் பொறுப்பாளர் பரக்கத்துல்லா நன்றி கூறினார் .






