March 2, 2026
சந்தவேலூரில் ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் கு. செல்வப் பெருந்தகை MLA பங்கேற்பு

சந்தவேலூரில் ஊராட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம் கு. செல்வப் பெருந்தகை MLA பங்கேற்பு

சுங்குவார்சத்திரம் நவம்பர் 1

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சந்த வேலூர் ஊராட்சியில் ஊராட்சிகள் தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது,
ஊராட்சி மன்ற தலைவர் வேண்டாம் மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை MLA. அவர்கள் பங்கேற்று ஊர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

Oplus_16908288

இக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் கருணாநிதி, வட்டாட்சியர்வசந்தி,வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதி ,மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசித்ரா, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை MLA விடம் EPS அவர்கள் செங்கோட்டையனை திமுக-வின் B டீம் என்று சொல்கிறார்கள் உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோது செல்வப் பெருந்தகை MLA அவர்கள் கூறியதாவது B டீம் என்றும் சொல்லட்டும் C டீம் என்றும் சொல்லட்டும் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் காட்டிக் கொடுக்காமல் இருந்தால் நல்லது எனவும் மத்திய பாஜக-விற்கு காவடி தூக்கியதும் மத்திய பாஜக-விற்கு தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்தது யார் என்று அனைவருக்கும் தெரியும் என எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மறைமுகமாக சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *