
வாடிப்பட்டி பேரூராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்
வாடிப்பட்டி, அக்.30-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம் நடந்தது. 1வது வார்டு சாணம் பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவில் நடந்த சிறப்பு கூட்டத்திற்கு,
பேரூராட்சித் தலைவர் மு. பால்பாண்டியன் தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில், இளநிலை உதவியாளர் முத்துப்பாண்டி, வரித் தண்டலர்கள் சதீஷ்குமார், மலர்விழி ஆகியோர் பொதுமக்களிடமிருந்து அடிப்படை பிரச்சினைகள் குடிநீர், வடிகால், தெருவிளக்கு, குப்பைகள் அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் பற்றி புகார்கள் பெற்று உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் ,பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து
கொண்டனர்.






