
பழனி அருகே மது போதையில் வழக்கறிஞர் மீது பட்டாசுகளை கொளுத்தி போட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்.
பழனி : அக்டோபர் : 28
கடந்த 16.10.2025 அன்று வழக்கறிஞர் தனுஷ் பாலாஜி தனது நண்பருக்காக பழனி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பேக்கரி அருகே நின்று கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக மஹிந்திரா எக்ஸ்யூவி காரில் வந்த ஆறு பேர் கொண்ட குழு மது போதையில் பொது மக்களுக்கு இடையூறு விதிக்கும் வகையில் காரில் இருந்தபடியே பட்டாசுகளை கொளுத்தி வெளியே போட்ட வண்ணம் இருந்து இருக்கிறார்கள்.
மேற்படி செயலால் வழக்கறிஞர் தனுஷ் பாலாஜி என் மீதும் பட்டாசு விழுந்துள்ளது. எதற்கு இவ்வாறு பட்டாசுகளை கொளுத்தி போடுகிறீர்கள் என்று வழக்கறிஞர் தனுஷ் பாலாஜி கேட்டதற்கு மேற்படி காரில் இருந்த கவுசிக் உட்பட ஆறு பேரும் இறங்கி அப்படித்தான் போடுவோம் என்று கூறி அவரை கீழே தள்ளி விட்டு சட்டையை கிழித்து அடித்து வாயை உடைத்துள்ளனர். மேற்படி சம்பவ இடத்திலிருந்து தனுஷ் பாலாஜி தப்பித்து தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லும்போது அவரை கொலை செய்யும் நோக்கோடு தொடர்ச்சியாக அவரை தனது காரில் இடிப்பதற்காக துரத்தி வந்துள்ளனர்.

மேற்படி சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர் தனுஷ் பாலாஜி தனக்கு ஏற்பட்ட காயங்களுக்காக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தற்போது தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளார்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கவுசிக் உட்பட அனைவரையும் கைது செய்யக்கோரி பழனி வழக்கறிஞர் சங்கம் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு ஈடுபட்டது. அதில் மூன்று பேரை மட்டும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளி ஆன கௌசிக்கு உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்ய முயற்சி எடுக்காமல் இருந்துள்ளனர். சம்பவத்தில் வழக்கறிஞரை கொலை செய்வதற்கு பயன்படுத்திய காரும் கஸ்டடி எடுக்காமல் இருந்துள்ளனர்.

இதனை கண்டித்து வழக்கறிஞர் சங்கம் இன்று சாலை மறியல் ஈடுபடுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையிலே சம்பவ காரினை காவல்துறை நேற்று இரவு கஸ்டடியில் எடுத்தது. மீதமுள்ள மூன்று முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி இன்று காலை 10 மணியளவில் பழனி வழக்கறிஞர் சங்கத்தைச் சார்ந்த வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் வழக்கறிஞர் தனுஷ் பாலாஜி மீது கொலை முயற்சி செய்ததற்கான குற்ற பிரிவினை குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார்.
போராட்டத்தில் பழனி அட்வகேட் அசோசியேசன், பழனி பார் அசோசியேஷன், பழனி வழக்கறிஞர்கள் நிர்வாககுழு ஆகியவற்றை சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பழனி நிருபர் நா.ராஜாமணி – 8973350663






