
மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் துர்நாற்றத்துடன் வீசுகிறது நோய் தொற்று பரவும் அபாயம்..!
மதுரை:
மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அல்ல படாமல்,
இறைச்சி கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு குப்பைகள் சாலைகளில் சிதறி கிடப்பது வாகன ஓட்டிகளில் விபத்தில் சிக்கு வைப்பதாக உள்ளது.
மேலும் ,இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிக அளவு உள்ளது. குறிப்பாக, மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட தேனி மெயின் ரோடு டோக் நகர் செல்லும் பகுதி 66 ஆவது வார்டு பகுதியில் சுசி பெட்ரோல் பங்க் அருகே சாலையில் நடுவில் குப்பைகள் சிதறி கிடப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், டோக் நகர் பிரதான சாலைக்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து அதன் மேல் பெரிய கற்கள் வைத்துள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த கற்களின் மீது மோதி கீழே விழுந்து செல்லும் அவளும் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.
குறிப்பாக, பைபாஸ் சாலை முடக்கு சாலை காளவாசல் உள்ளிட்ட பகுதியை குப்பைகள் எந்த இடத்திலும் அருளவில்லை என, குற்றச்சாட்டு பொதுமக்கள் முன்வைக்கின்றன.
இதனால், நோய் தொற்று பரவும் அபாயத்துடன் இருப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
உரிய நடவடிக்கை எடுக்குமா, மாநகராட்சி நிர்வாகம் இல்லை மாநகராட்சி நிர்வாகம் செயலிழந்து விட்டதா என, சமூக ஆர்வலர்கள் கேள்விகள் எழுப்புகின்றன.
இரண்டு அமைச்சகர் இருக்கும் மதுரை மாநகராட்சி பகுதியில் இதுபோன்ற அவலம் தொடர்கதையாகவே இருக்கிறது.






