
மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மழை காலம் முடியும் வரை மாலை நேர சிறப்பு வகுப்புகள் ரத்து.. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் - நிறுவனத் தலைவர் சா.அருணன் - கோரிக்கை..
பருவ மழை தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களின் பெருமளவில் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக ஏரிகள் குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பி வருகிறது., ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதில் பல சிரமங்கள் உள்ளது பேருந்து இரயில்கள் வருவதில் தாமதம் ஏற்படும் மாலை நேரங்களில் மேக மூட்டம் காரணமாக 3.30 மணிக்கே இருட்டுகின்ற சூழல் ஏற்படுகிறது.
பள்ளிகள் முடிந்து 4.00 மணிக்கு பிறகே பள்ளிகள் விடப்படுகிறது அது மட்டுமல்லாது பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மெல்ல பயிலும் திறன் வகுப்பு மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு பள்ளிநேரம் முடிந்து சிறப்பு வகுப்பு 5.30 மணி வரை நடைபெறுகிறது அதன் பிறகே மாணவர்களை வீட்டிற்கு அனுப்புகின்றனர்.
இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தும் இருட்டிலும் பேருந்து ரயில்கள் தாமத்திற்கு மத்தியிலும் வீட்டிற்கு செல்கிறனர் இதனால் மாணவர்களுக்கு அலைச்சல் உடல் நல குறைவு ஏற்படும் சூழல், ஆதலால் மாணவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு சிறப்பு வகுப்புகளை ரத்து செய்தும் அந்தந்த பள்ளிகளின் சூழ்நிலைக்கு ஏற்ப முன்கூட்டியே 3.30 மணிக்கே மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி மாணவர்கள் நலன்காக்க மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் , பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அவர்களையும் தனியார் பள்ளிகள் இயக்குநர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு






