March 2, 2026
பழமுதிர் சோலையில் இந்த சஷ்டி விழா:

பழமுதிர் சோலையில் இந்த சஷ்டி விழா:

அலங்காநல்லூர்:

மதுரை அருகாமையில் அமைந்துள்ள அழகர் மலையின் உச்சியில் மிகப் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடு எனும் சோலைமலை முருகன் கோவில் இயற்கை வளத்துடன் அமையபெற்றுள்ளது.

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி பெருந்திருவிழா மிக முக்கியமானதாகும். இந்த திருவிழா , காலையில் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் விக்னேஷ்வர பூஜைகள், யாகசாலை பூஜையுடன், சிவாச்சார்களின் வேத மந்திரங்களுடன் தொடங்கியது.

தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
பின்னர் 10 மணிக்கு சண்முகார்ச்சனையும், தொடர்ந்து மஹா அபிஷேகமும், தீபாராதனையும், நடந்தது.

சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, உள்பட 16 வகையான அபிஷேகங்கள் தீபாராதனைகள் நடந்தது.அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடும் மேளதாளம் முழங்க நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

23ந் தேதி இன்றுகாமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 24ந்தேதி வழக்கம்போல் பூஜைகளும்,அன்று யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடும், 25ம் தேதி அன்று ஆட்டு கிடாய் வாகனத்தில் சுவாமி புறப்பாடும். 26ந் தேதிஅன்று சப்பர வாகனம், . 27ந் தேதி முக்கிய திருவிழாநிகழ்ச்சி நடைபெறும்.

இதில், அன்று காலையில், குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும். மாலை யில் 4 மணிக்குவேல் வாங்குதல், 4.30 மணிக்கு வெள்ளி மயில்வாகனத்தில் புறப்பாடாகி திருக்கோயிலின் ஈசான திக்கில் கஜமுக சூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசூரனையும் மாலை 5 .30மணிக்கு சம்ஹாரம் செய்து தல விருட்சம் நாவல் மரத்தடியில் பத்மாசூரனையும் சம்ஹாரம் செய்து சூரசம்ஹாரம் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சாந்த அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.

28ந் தேதி காலை 10. 45மணிக்கு மேல். 11மணிக்குள் திருக்கல்யாண திருவிழா. தீபாராதனை, அன்னபாவாடை தரிசனமும்.

மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீர் உற்சவத்துடன், திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *