
பள்ளி மாணவர்களை பேருந்தில் இருந்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஓட்டுநர். நடவடிக்கை எடுப்பாரா போக்குவரத்து துறை அமைச்சர்?
ஸ்ரீபெரும்புதூர் அக்டோபர் 16
அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களை ஏலனத்தோடு பேருந்தில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய அரசு பேருந்து ஓட்டுநர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் 16 10 2025 வியாழக்கிழமை சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு தண்டலம் பேருந்து நிறுத்தத்தில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி செல்வதற்காக மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர் .
அப்போது மாலை 5:13 மணி அளவில் மாநகரப் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த ” தடம் எண் 587, பணிமனை எண் PMK0582, மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து தண்டலம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சுமார் 200 மீட்டர் தள்ளி நின்றுள்ளது தள்ளி நின்ற பிறகும் இன்னும் காத்திருந்தாள் மழை வந்துவிடும் எனவே மழை வருவதற்குள் வீட்டிற்கு சென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்கள் ஓடிச் சென்று பேருந்தில் ஏறி உள்ளனர்
பேருந்து நடத்துனர் இவர்களை இறக்கி விடும்படி சொல்லிவிட்டு அமர்ந்திருக்க ஓட்டுநர் தன் இருக்கையில் இருந்து இறங்கி வந்து பள்ளி மாணவர்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டுள்ளார் இதனால் பெரிதும் மனவேதனையுடன் மாணவர்கள் அடுத்த பேருந்திலாவது ஏற்றிச் செல்வார்களா என்ற வருத்தத்தோடு நகர்ந்து சென்றனர்
இது குறித்து மாணவர்களிடம் விசாரித்த போது பெரும்பாலும் அரசு பேருந்துகள் தங்களை இப்படித்தான் நடத்துவதாகவும்.

நாங்கள் ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனவே தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்க முடியாமல் அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறோம் நாங்கள் அரசு பள்ளியில் படிப்பதையும் பேருந்தில் இலவசமாக செல்வதையும் பெரும்பாலும் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் எங்களை இப்படி நடத்துகிறார்கள் எனவே நாங்கள் எங்கள் பெற்றோர்களிடம் சொல்லி நாங்கள் பேருந்தில் பயணச்சீட்டு எடுத்துக் கொள்கிறோம் அப்பொழுதாவது எங்களை ஏற்றி செல்வார்கள் அல்லவா என மன வருத்தத்தோடு கூறினார்கள்,
அரசு பள்ளி மாணவர்களை ஏளனமாக நினைத்து கழுத்தைப் பிடித்து பேருந்தில் இருந்து கீழே தள்ளி இறக்கிவிட்ட பேருந்து ஓட்டுனர் மீதும் அவரை வழிநடத்திய நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.






