March 2, 2026
துணை முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்.

துணை முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்.

தமிழனின் பாரம்பரிய கலை கராத்தே விளையாட்டுக்கு அகில இந்திய அளவில் அங்கீகாரம் இழந்து தமிழகத்தில் இருக்கும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

விளையாட்டு துறைக்கு கோடி கோடியாக வாரி வழங்கி வருகின்ற தமிழக முதல்வர் அவர்களுக்கும்,விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு பணிகளை வழங்கி வருகின்ற துணை முதல்வர்,விளையாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும் விளையாட்டு துறை சார்பில் மணமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்

தமிழகத்தில் உலக கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் ( WKMA ) சங்கத்தின் தலைவர் பாலமுருகன் அவர்கள் போலியான கராத்தே சங்கத்தை ஆரம்பித்து தமிழகத்தில் இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தி சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கராத்தே வீரர்களிடம் வசூல் செய்துள்ளார்

தமிழக அரசுக்கும்,விளையாட்டு துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி வருகின்ற உலக கராத்தே மாஸ்டர்ஸ் அசோசியேஷன் சங்கத்தின் தலைவர் பாலமுருகன் அவர்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு அப்பாவி ஏழை குழந்தைகளை காப்பாற்ற வேண்டுமாய் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொள்கிறேன்

கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *