
மரக்கன்றுகள் நடும் பணி. ஆட்சிய..
மதுரை:
மதுரை, மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி ஊராட்சி கடவூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.20 லட்சம் மதிப்பீட்டில் பெருவாரியான மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.
மகிழம் 100, மந்தாரை 50, சொர்கமரம் 50, மகாகனி 150, ஆப்ரிகன் காயம் பூ 50, கொய்யா 50, மாம்பழம் 50, சப்போட்டா 50, தென்னை 50, ஆவி மரம் 50, இலவம் பஞ்சு 50, வாகை 50 உள்ளிட்ட 750க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளை, மதுரை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






