March 2, 2026
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் 94-வது பிறந்தநாள் கொண்டாட்டம்...

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயா அவர்களின் 94-வது பிறந்தநாள் கொண்டாட்டம்...

அனைத்து இந்திய கலாம் கனவு அறக்கட்டளை தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பாக தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூரில் மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏபிஜே.அப்துல் கலாம் ஐயா அவர்களின் 94வது பிறந்தநாளை பொதுமக்களுடன் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் திரு.சென்னையன் வரவேற்புரை வழங்கினார் மற்றும் சிறப்பு விருந்தினராக அகில இந்திய வேளாண் மாணவர்கள் சங்க தேசிய செயலாளர் முனைவர்.வினோத் அவர்கள் அப்துல் கலாம் பற்றி மக்களிடம் சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவானது திரு.சுப்பிரமணி,திரு. நாகராஜ்,திரு.கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திரு செல்வம் ஒன்றிய செயலாளர்,அதிமுக மற்றும் இவ்விழாவில் சமூக ஆர்வலர்கள் திரு. குமார்,வணிகர் சங்கம், திரு.அன்சர், திரு.ஜெட்லி செல்வம்,திரு.சாமிக்கண்ணு திரு.முனிராஜ் பெங்களூர், திரு.சுரேஷ்,திரு.கலக்கா குமார், திரு. முருகன் ஆகியோர் கலந்து கொண்டு அப்துல் கலாம் ஐயா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் மற்றும் மொரப்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *