
வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:
வாடிப்பட்டி, அக்.15.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்
துறை உதவியாளர்கள் சங்கம் சார்பாக, அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளர் களுக்கும் அடிப்படை ஊதியம் ரூ. 15,700 வழங்க கோரியும்,இறந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களின் சி பி எஸ் இறுதித் தொகையை உடனே வழங்க வேண்டும்.
கருணை அடிப்படையில் கிராம உதவியாளருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி நியமனம் வழங்க வேண்டும்.
வருவாய்த்துறையில் ஏற்படும் காலிப் பணியிடங்களை50 சதவிகிதம் கிராம உதவியாளருக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டச் செயலாளர் அழகு பாண்டி தலைமை தாங்கினார், கண்ணன் விளக்கவுரையாற்றினர், மாநில இணைச்செயலாளர் வளர்மதி நிறைவு உரையாற்றினார், முடிவில், ரமா நன்றி கூறினார்.






