March 2, 2026
அமராவதி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை

அமராவதி ஆற்றில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அடுத்துள்ள கொழுமம் அமராவதி ஆற்றில், இன்று(13.10.2025) மாலை சர்வதேச பேரிடர் தணிக்கும் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மடத்துக்குளம் தீயணைப்பு துறையிரால் ஒத்திகை நிகழ்ச்சி(Mock drills) நடத்தப்பட்டது.

இதில் மடத்துக்குளம் வருவாய் வட்டாட்சியர் குணசேகரன் தலைமையிலான வருவாய்த்துறையினர், முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *