
மதுரை செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை: மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் வழங்கினார்:
மதுரை.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
மாநிலத் தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சமயச்செல்வம் முன்னிலை வகித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், அவர் நமது சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று சங்க உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா சங்க அலுவலகத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் அனைத்து செய்தியாளர்களுக்கும் அரசு ஆட்சியர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
விழாவில், மாநில துணைத்தலைவர்கள் ஜெயராமன், வல்லதரசு, மாநில துணைச் செயலாளர் முருகேசன் , மாநில செய்தி தொடர்பாளர் அஜித்குமார், மாநில தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், பாண்டி முருகன் மாநில தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருச்சிற்றம்பலம், நாகேந்திரன், வீரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், மாநிலப்பொருளாளர் புஸ்பராகன் நன்றி கூறினார்.






