
மாவட்ட ஆட்சியர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்
மதுரை.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ட .கொட்டாணிபட்டி ஊராட்சியில்,
உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பொது நூலகத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூபாய் 1.82 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மராமத்து பணிகளை, அவர் பார்வையிட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ட .கொட்டாணிபட்டி ஊராட்சியில் அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கீழ் ரூபாய் 22.50 லட்சம் மதிப்பீட்டில் சமத்துவ இடுகாடு மைதானத்தில் காத்திருப்போர் கூடம், சுற்றுச்சுவர், படுக்கை மட்ட தரைப்பாலம் கொண்ட அணுகு சாலை அமைக்கப்பட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், காரைக்கேணி ஊராட்சியில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ரூபாய் 12.39 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும் செடிகளின் ரகங்கள் மற்றும் செடிகளின் விற்பனை குறித்து பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
இப் பண்ணையில், புளி 3500, பூவரசு 1000, பாதாம் 1000, நீர் மருத மரம் 1000, வாகை 1000, புங்கன் 1000, மகிழம் 1500, உள்ளிட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளை மண் மற்றும் இயற்கை எருவுடன் பாலிதீன் கவர்களில் நிரப்பி, அவற்றை தினமும் ஏராளமான பெண்கள் பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தே.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டு, அக்கிராமங்களில் குறுங்காடுகளை ஏற்படுத்துதல், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுதல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்கள் வீடுகளில் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.






