
பல்லடம் அருகே கடை அடைப்புடன் உண்ணாவிரதம்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக உள்ள
பைபாஸ் சாலை யில் புதிதாக அமைக்கப்பட்டு சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் , என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து 500க்கும் மேற்பட்ட வணிக வியாபார கடைகள், மற்றும் ஆட்டோக்கள், டாக்ஸிகள், வேன் , என இன்று ஒரு நாள் கடையடைப்பு நடந்து வருகின்றது, தொடர்ந்து பொங்கலூர் பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
சுங்கச்சாவடி அமைக்கும் விதிமுறைகளுக்கு முரண்பாடாக அதாவது நகராட்சி மாநகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 10 கிலோமீட்டர் கடந்த பகுதிகளிலேயே சுங்கச்சாவடி அமைக்க வேண்டும்.

ஆனால் 5 கிலோமீட்டர் தூரத்திலேயே அமைத்து முறைகேடாக தற்போது அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்






