March 2, 2026
பாலமேடு பகுதியில் 3கோடியே 95 லட்சம் மதிப்பில்அரசு கட்டிடங்கள், மற்றும் தார்சாலை அமைக்க பூமி பூஜை: எம்.எல்.ஏ.வெங்கடேசன் பூஜை செய்து துவக்கி வைத்தார்..

பாலமேடு பகுதியில் 3கோடியே 95 லட்சம் மதிப்பில்அரசு கட்டிடங்கள், மற்றும் தார்சாலை அமைக்க பூமி பூஜை: எம்.எல்.ஏ.வெங்கடேசன் பூஜை செய்து துவக்கி வைத்தார்..

அலங்காநல்லூர்,அக்:2 –

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜகாள்பட்டி ஊரட்சி மறவபட்டியில் மறவபட்டி யிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை ஒன்டரை கிலோமீட்டர் 91 லட்சத்தில் தார்சாலை அமைக்க பூமிபூஜை நடந்தது.

சோழவந்தான். எம்.எல்.ஏ. வெங்கடேசன் கலந்துகொண்டார். தொடர்ந்து, ராஜாக்காள் பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இசேவை மையம். 39.70 லட்சத்தில் அமைய எம்எல்ஏ பூமி பூஜையில் கலந்துகொண்டர்.

பாலமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 99 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ. வெங்கடேசன் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டுவதற்கான ரூபாய் 75 லட்சத்தில் பூமி பூஜை நடந்தது.

கீழச்சினம்பட்டியில் 90 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

இந்த பூமி பூஜையில், சோழவந்தான் எம். எல். ஏ .வெங்கடேசன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தார்.

நிகழ்ச்சியில், பொறியாளர் பொன்னுச்சாமி, உதவி செய்ய பொறியாளர்கள் மதியரசன் ,
சாந்தகுமார் பொறியாளர் அபிராமி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ். பரந்தாமன். முத்தையா. அருண்குமார் விஜயன் வட்டார மருத்துவர் டாக்டர் வளர்மதி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் பன்னைகுடி தனுஷ்கோடி, ஊர் சேரி செந்தில்குமார், சின்ன இலந்தைகுலம் ராதா, எரம்பட்டி சுந்தர்ராஜன், தொழிலதிபர் டாக்டர் பார்த்திபன், ஒப்பந்தகாரர்கள் ஆண்டிச்சாமி, வடிவேல், பாலமேடு பேரூராட்சி த் தலைவர் சுமதி பாண்டியராஜன், பாலமேடு துணை சேர்மன் ராமராஜ், நகர செயலாளர்
மனோகரவேல் பாண்டியன், முரளி, இளைஞர் அணி சந்தன கருப்பு, பிரசாந்த், தண்டலைசதீஷ், கிளைக் கழக நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *