March 2, 2026
பள்ளி மாணவர்களுக்கு தாவர வகைகள் அறிதல் முகாம்...

பள்ளி மாணவர்களுக்கு தாவர வகைகள் அறிதல் முகாம்...

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி டவுன் சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தாவர வகைகளை நாம் எவ்வாறு அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு அறிந்து கொள்ளலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமாக பயிற்சி அளித்தார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் தாவர வகைகள் குறித்து அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்தாஸ் ஜெபக்குமார் திட்ட அலுவலர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *